Friday, May 27, 2011

குற்றத்தில் அணுவாகிறோம் !!

இரண்டாம் பதிவா எதப்பத்தி எழுதனும்னு ரொம்ப நாலா யோசிச்சு யோசிச்சே காலம் கடந்து போச்சுது.. சமீப காலங்களில் என்ன எழுதணும்னு தூண்டிய விஷயங்கள் தமிழக தேர்தல், ஊடகங்களால் மறக்கப்பட்ட ஜார்கந்த் பாக்சிட் கனிம சுரண்டலுக்கு எதிரான மலைவாழ் மக்களின் போராட்டம், அப்புறம் ஜப்பான் அணு உலை வெடிப்பு- அதை தொடர்ந்து இங்கே எழுந்த "அணு உலைகள் பாதுகாப்பானவை  தானா?" என்பதான விவாதங்கள்... பிபாசாபாசு வரி ஏய்ப்பு செய்ததயும், ரஜினிகாந்த் திட உணவு சாப்பிட்டதையும், கவுதம் கம்பீர் காயம் குறித்தும், பக்கம் பக்கமாக எழுதிய பத்திரிக்கைகளில் நான் மேல சொன்ன விசயங்களுக்கு, ஒரு 'கண்ணீர் அஞ்சலி' பெட்டி செய்தி அளவுக்குக் கூட பத்தி ஒதுக்கல.. இன்றைக்கு உங்களுக்கு என்ன புடிக்கணும்னு நேற்று இரவு 12 மணிக்கு ஊடகங்கள் முடிவு செஞ்சாச்சு...! இந்த நாள் இனிய நாள் தான்.. !!!
இவ்விதமான விவாதங்களுக்குள்ள அணு உலைகள் பத்தின, எனக்கு தெரிஞ்ச விசயங்களை உங்கள்ட பகிர்ந்துக்கணும்னு தோணுது,.. கொஞ்சம் அவசிமானதாகவும்  நினைக்குறேன் ! இதுக்காக இணையங்களில், புத்தகங்களில் கொஞ்சம் தேடினேன்.. முதலிலேயே எனக்கு கரண்ட் அடிச்சமாதிரி ஒரு செய்தி,' இந்த 21 நூற்றாண்டில் கூட அணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும், பாதுகாப்பாக  அழிப்பதற்கும் 'முறையான' தொழில்நுட்பம் யாரிடமும் இல்லை!' என்ற செய்திதான்.. வெட்டியெடுக்கப்பட்ட யுரேனியத் தாதுவ ஒரு குறிப்பிட்ட அளவு செறிவு ஊட்டப்பட்டு, பின் அணு உலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது! ( தயாரிப்பு முறைஎல்லாத்தையும் விளக்க இடம் இல்ல..! அப்பாடி தப்பிச்சுட்டேன்! :)) இந்த பிட்டுல ஒரு கொசுறு செய்தி-  யுரேனியும் செரிவூட்டுதலில்  வருகின்ற கழிவை (Depleted Uranium) 'Depleted Uranium Bombs', அதாவது குட்டிக் குட்டி அணுகுண்டுகளாக தயாரிக்கிறார்கள்! இவ்வகையான குண்டுகள் தான் இராக் போரிலும், இலங்கை போரிலும் பயன்படுத்தப்பட்டன..
சரி இப்போ ஆட்டத்துக்கு வருவோம்.. கதிர்வீச்சு என்பது எப்போதுமே தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிற பண்பு.. அதாவது ஒரு முறை வெட்டி எடுக்கப்பட்டால், பின்பு தன் வேலையை தொடங்கி விடும்.. 30km - 40km  அதன் கதிர்வீச்சு இருக்கும்.. ஒரு சின்ன உதாரணம் சொல்றேனே..  26 April 1986 - Chernobyl என்ற இடத்துல நடந்த அணுவிபத்தால தோரயமா, ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் 20000 வருடங்களுக்கு 'மனிதன் வாழவே தகுதியற்ற இடமாக'  மாறி இருக்கிறது.. அணுக்கசிவுகளால் என்னன்ன விளைவுகள் இருக்கும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை.. (சில பாதிக்கப்பட்ட படங்களைக்கூட பதிவேற்றம் செய்யலாம்னு பார்த்தேன்.. அப்புறம் வேண்டாம்னு விட்டாச்சு.. கஷ்டமா இருக்கு அவங்கள பார்த்தா...!!) 2010 வரைக்கும் இந்தியாவில் அணுஉலைகளின் எண்ணிக்கை 6 மட்டும் தான். ஆனால் INDO-US ஒப்பந்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை 13. எல்லாமுமே 8000MW- 10000MW அளவுக்கு மின்சாரம் தயாரிக்கக்கூடியவை. 
இதுல மிகுந்த வருத்தம் தரக்கூடிய விஷயம் என்னன்னா, இந்த அணு உலைகள்  அனைத்துமே இரண்டாம் தர, மூன்றாம் தர தொழிநுட்பத்தில் உருவாகக்கூடியவை மட்டுமே!  மேலும், அணு விபத்துக்கு, உலைகள்  விற்ற எந்த நிறுவனத்தையும் குற்றம் சொல்ல கூடாது, முடியாது! இழப்பீட்டு தொகை கிடையாது! இந்திய சட்டத்தின் முன்போ, உலகின் எந்த சட்ட அமைப்பின் முன்பும் அந்நிறுவனத்தின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாது! மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள்- இந்த சரங்கள் அனைத்தும் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டு ரகசியமாய் இணைக்கப்பட்டவை(Nuclear Civil Liabilities Bill).  அப்போ மக்கள்?? அட போங்க பாஸ், மக்களாவது மண்ணாவது!  வாழ்க ஜனநாயகம் !! :(
இந்த அளவுக்கு அணு ஒப்பந்தம் போட்டது வெறும் 10% மின்சார தேவைக் குறைவை பூர்த்தி செய்யத்தான்! (By 2006 1,60,000MW produced; projected by 2032 as 8,00,000MW). வெறும்10% தேவைக்கு ஈவு இரக்கமில்லாம தாந்தோநித்தனமா இந்த இந்திய அதிகாரிகள் முடிவெடுத்திருகாங்க ! உபயம் General Electricals, Westing House, Areva போன்ற முதலாளிகள் !  இதுல நம்ம அதிகாரிகளுக்கும் அரசாங்கத்த நடத்துற அரசியவாதிங்கள், முக்கிய எதிர்கட்சி தலைகள் போன்றவர்களுக்கு கிடைக்குற கமிசன் மட்டும் தோரயமா ஒரு லட்சம் கோடி !! (2Gல கழுத்துவரைக்கும் மச்சி! )

மாற்று எரிசக்தி(Non-Conventional Energy) மூலமா கண்டிப்பா நம்மால் 6,00,000MW அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது இருக்க எரிசக்தி கொள்கைய (50 வருஷம் ஆச்சு!) மாற்றம் செய்வதின் மூலம் - எரிசக்திய 25% - 30% மிச்சப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அணு உபயோகத்தை குறைக்க முடியும்னு நம்புறேன்..  நம்மக்கு அணு உலைகளை விக்குற அமெரிக்கா தான் கற்றலை மூலமா உலகத்துலேயே அதிக மின்சாரம் தயாரிக்கிறது! 

இப்படி புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி (Renewable Energy) துறைய இந்த முதலைங்க வளர விடுறதே இல்ல..  எனக்கு தெரிஞ்சு சூரிய சக்தி, காற்றலை துறையில் அதிகமான படிப்புகளையோ, பட்டதாரிகளையோ, முனைவர்களையோ உருவாக்க நம் இந்தியக் கல்வி முறை அதிக அக்கறை காட்டுறது இல்லை.. 'Scientist in Wind Energy' என்று நான் கேள்விப்பட்டதில்லை ! அவர்களுக்கு தெரியும், எங்க அடிச்சா அது மலடாவே இருக்கும்னு ! அவிங்க கடைய காலி பண்ண தேவை இல்ல பாருங்க !!

கொஞ்சூண்டு படிச்சிட்டு, ஓரளவு புத்தியோட (விடுங்க பாஸ் இதெல்லாம் சந்தேகபட்டுகிட்டு!) இந்த அளவுக்கு அளவீடுகளை என்னால புரிஞ்சுக முடியும்ன, காலம் காலமா இதுக்காகவே ஆணி புடுங்கிட்டு இருக்கவங்க இதெல்லாம் யோசிக்கமலா இருப்பாங்க?? ஹ்ம்ம்ம்.. எல்லாம் பணம் பண்ற வேலை பங்காளி..!!! ஓங்கி தட்டிக்கேட்காம, ஒதுங்கி போற மனோநிலையில் கடைசியா, வாழவே தகுதி இல்லாத உலகத்த அடுத்து வார தலைமுறைக்கு விட்டுப்போகின்ற குற்ற உணர்ச்சியோட நாம் மடிகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை.. !!


மனசோட சேர்ந்து காலும் வலிக்குது..  :(  வாங்க ஒரு டீ போடலாம்..!
 

2 comments:

  1. நண்பா , மிகவும் அருமையான பதிவு , அதே சமயம் அணைத்து இந்திய மக்களுக்கும் இது ஒரு அபாய சங்கு - எச்சரிக்கை மணியாக உள்ளது தங்களின் இந்த பதிவு .இதில் சில முக்கியமான பதிவு எனக்கும் இனி இந்த பதிவை படிப்பவர்களுக்கும் ஆச்சர்யம் அளிக்ககூடியதும் அதே சமயம் மிகவும் வருத்தப்பட வேண்டியதுமான ஒரு செய்தி என்னவென்றால்
    " இந்த அளவுக்கு அணு ஒப்பந்தம் போட்டது வெறும் 10% மின்சார தேவைக் குறைவை பூர்த்தி செய்யத்தான்! (By 2006 1,60,000MW produced; projected by 2032 as 8,00,000MW). வெறும்10% தேவைக்கு ஈவு இரக்கமில்லாம தாந்தோநித்தனமா இந்த இந்திய அதிகாரிகள் முடிவெடுத்திருகாங்க !" . சரி இது போகட்டும் என்றால், தங்களின் ஒரு புள்ளி விபரம் "மாற்று எரிசக்தி(Non-Conventional Energy) மூலமா கண்டிப்பா நம்மால் 6,00,000MW அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும். தற்போது இருக்க எரிசக்தி கொள்கைய (50 வருஷம் ஆச்சு!) மாற்றம் செய்வதின் மூலம் - எரிசக்திய 25% - 30% மிச்சப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமா அணு உபயோகத்தை குறைக்க முடியும்னு நம்புறேன்.."
    மிகவும் யோசிக்க வேண்டிய விஷயம் இது.. இனியாவுது நம் இந்திய அரசு இதை பற்றி யோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பர்களா என்றால் அது ஒரு பெரிய முட்டாள் தனம் என்று தெரிய வந்தது தங்களின் இந்த கருத்தை படித்தவுடன் , இதில் எனக்கு முக்கியமாக பிடித்தது என்னவென்றால்
    "எனக்கு தெரிஞ்சு சூரிய சக்தி, காற்றலை துறையில் அதிகமான படிப்புகளையோ, பட்டதாரிகளையோ, முனைவர்களையோ உருவாக்க நம் இந்தியக் கல்வி முறை அதிக அக்கறை காட்டுறது இல்லை.. 'Scientist in Wind Energy' என்று நான் கேள்விப்பட்டதில்லை ! அவர்களுக்கு தெரியும், எங்க அடிச்சா அது மலடாவே இருக்கும்னு ! அவிங்க கடைய காலி பண்ண தேவை இல்ல பாருங்க !! ....

    நாம் அணைவரும் வருத்தப்படவேண்டிய விசயம், அதே சமயம் இந்த துறை பற்றி "அரசுக்கும்" , "மக்களுக்கும்" ஒரு மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்படவேண்டிய கட்டாயம் , நன்கு படித்த, அதே சமயம் சமுக நலனில் அக்கறையுள்ள நல்ல, படித்த அரசியல் வாதிகள் ...நிகழ்காலம் மற்றும் நம் எதிர்கால சந்ததிகள் நலனில் அக்கறை எடுத்து ஒரு மிகப்பெரிய அறிவியல் புரட்சி மற்றும் மக்கள் நலன் ஏற்படவேண்டும் என்று என்னை போன்று எத்தனையோ சாமானிய மக்களின் ஆவலாக உள்ளது!!! நிச்சயம் ஒரு நாள் இது நடக்கும் என்று நம்புவோம் !!!
    வாழ்க மக்கள் நலன் , வளர்க நல் அறவியல் புரட்சி மற்றும் மாற்றங்கள் .....

    இப்படிக்கு ,
    எளிய மனிதன்
    பாலாஜி ராவ் .

    ReplyDelete
  2. http://thatstamil.oneindia.in/news/2011/05/31/germany-lead-green-energy-with-nuclear-shutdown-merkel-aid0090.html
    ஜெர்மன் நாட்டில அணுமின் நிலையங்களை எல்லாம் மூட போறாங்கலாம் :)
    ஆன நம்ம நாட்டில இப்படிலாம் நடக்கும்னு நம்மால எதிர் பக்க முடியுமா??

    ReplyDelete