Tuesday, June 28, 2011

நீர் பிறக்கும்முன் !!

நீர் பிறக்கும்முன் !!
எழுதியவர் இந்திரா ; கிழக்கு பதிப்பகம்.


இந்த புத்தகத்தை எழுதியவர் எனக்கு பரிச்சயமான ஜோதி அக்கா என்கின்ற அளவிலேயே இதை வாசிக்கத்தொடங்கினேன்... புத்தகம் நூறு பக்கத்திற்குள் அடங்கியது எனக்கு இன்னும் சௌகர்யமாய்ப் போனது.. சற்றும் எதிர்பார்க்காமல் முதல் பக்கத்திலேயே என்னை புரட்டிப் போட்டது- எழுத்து நடையும். அது தாங்கிய அதிர்வும்..

இருபத்திமூன்று வயதில் நீங்கள் என்னவாக ஆசைப்பட்டிருப்பீர்கள்?? நிற்க, கொங்கு மண்டலத்தின் கிராமத்தில் பிறந்து, பாரதிராஜா படங்களின் சாயல் மாறாத மனிதர்களின் ஊடே வார்கப்படுகின்ற நிலையினின்றும் இந்தக் கேள்விக்கான பதிலை சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகிறது..! சமுதாயம் மற்றும் குடும்பத்தின் பலத்த எதிர்ப்புகளை மீறி 23 வயதில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டு, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தனது பகுதிலுள்ள தலித் மக்களின் பதினைந்தாண்டுகால குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண, தான் மேற்கொண்ட தொடர் போராட்டத்தையும், பெண் என்பதாலேயே தான் அடைந்த அவமானங்களைத் தாண்டி, பூச்சுகள் ஏதுமின்றி நம்முடன் பகிர்கின்ற அனுபவ பகிர்வே இந்த புத்தகம்.

வட்டார வழக்கும், அது சார்ந்த பண்பாடும், சமூக கட்டமைப்பும், இவற்றைத் தனியே விளக்காமல், இயல்பாகவே இழையோடியிருப்பது பாராட்டுக்குரியதே... நம்மோடு இருந்தாலும், நம்மால் அதிகம் கவனிக்கப்படாத பஞ்சாயத்துகளின் மிக நுணுக்கமான உட்கட்டமைப்பை வாசிப்பின் ஊடே உணர வைத்தது, தளத்தை பலப்படுத்திக் காட்டி இருப்பது, பகிர்வின் ஓட்டத்தை யாதொரு விலகளுமின்றி தெளிவுபடுத்தி இருக்கிறது! மிகச் சாதாரணமாய் நிழல் பரப்பிக்கிடக்கின்ற இந்த பஞ்சாயத்து அலுவலகத்திலா கோடிக்கணக்கில் பணம் புழங்குற இடம் என்றறிகிற போதும், அது சார்ந்த கீழ்த்தனமான அரசியலாகட்டும், ஆதிக்க சமூகத்தின் முகத்திரையை உரித்துக்காட்டுவதாகட்டும், ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வை நம்மில் உயிர்ப்புருவதாகட்டும், போகிற போக்கில் இதயெல்லாம் நம்மிடம் பேசுவதைப்போல சொல்லிப்போகிற போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை..

பொதுவாக அனுபவப் பதிவை எழுதுகிறவர்கள் அடிநாதமாய்த் தங்களின் தீரங்களை கதாநாயகனுக்குரிய தோரணையோடு மறைமுகமாக ஆங்காங்கே பதிவுசெய்து போவதுண்டு. ஆனால் இந்த ஓட்டத்தின் வழியெங்கும் அவர் தன் இயலாமையை, தோல்விகளை, அச்சத்தை, சறுக்கல்களை, சூழ்நிலைக் கைதியாய்த் தான் ஆக்கப்பட்டதை, தேர்ந்தெடுத்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டதை, பெண்ணுக்கென உருவாக்கப்பட்ட பலகீனமான தருணங்களை எவ்விதப் பாசாங்குமின்றிப் படைப்பில் பதிவுசெய்திருக்கிறார். இந்த உயிர்ப்பே படைப்பை வாசக அனுபவத்திற்கு நெருக்கத்தில் வைக்கின்றது. அது உண்மையும் கூட..

வாசிப்புக்குரிய நூல்...!

[ குறிப்பு : ஆசிரியரின் இயற்பெயர் ஜோதிமணி. தமிழில் பட்டம் பெற்றவர். 2 முறை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர். தமிழ்நாடு திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர். ]

Monday, June 27, 2011

செய்திகள் வாசிப்பது - தீக்கோழிகளுக்கு மட்டும் !!

...இந்த ரெண்டு நாலா வேலை மெனக்கெட்டு ஒரு மொக்கை காரியம் பண்ணினேன்.. ரொம்ப பொறுமையா உட்கார்ந்து மறக்காம மெகா டிவிலயும், வசந்த் டிவிலயும் செய்தி கேட்டது தான் அந்த மொக்கை காரியம்.. news scroll கூட விடல.! (சத்தியமா குறிப்பெல்லாம் எடுத்தேன்) இது நாள் வரைக்கும் இந்த ரெண்டு டிவிலயும் செய்திகள் கேட்டதில்ல..


"அப்படி வேலை மெனக்கெட்டு (நான் ரொம்ப பிஸியாக்கும்!! ) என்னதாண்டா பார்த்து தொலஞ்ச"னு கேட்குறீங்களா..?? இருங்க சொல்றேன்..

வசந்த் டிவில இப்போ(அதாவது 27-06-11 8.30pm) சொன்ன செய்தில இதெல்லாம் சொன்னங்க...
1. தலைப்பு செய்தில மாயாவதி சம்பந்தமா ஒரு நியூஸ்..
2. ஆந்திர உள்ளூர் கிரிக்கெட் போட்டில, தோல்வி அடைஞ்ச அணியில் இருந்த ஒருத்தர் எதிர் அணியில் இருந்த ஒருத்தர பேட்டால அடிச்சுக் கொன்ன நியூஸ்.
3. தாடிக்கொம்பு கோவில் கும்பாபிஷேக நியூஸ். (மூணு நிமிஷம் கவரேஜ்)
4. கரூர்ல நடந்த மதுவிலக்கு போராட்டம். (அதுவும் டாஸ்மாக் கடைய விட்டுட்டு, ஆஸ்பத்திரி பக்கத்துல பண்ணினாங்க!)
5. James Bond நடிகர் Daniel Greig திருமணம் பண்ணிக்கொண்ட செய்தி.

அரைமணி நேரமா இதெயெல்லாம் சொன்னவனுங்க ஒரு மூச்சுக்கூட பெட்ரோல், டீசல், சமையல் காஸ், விலை உயர்வு சம்பந்தமாவும், அதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் செய்து கொண்டிருக்கிற போராட்டங்கள், எச்சரிகைகள சொல்லவே இல்ல. ! அட நியூஸ் ரீல்ல கூட இது வரலான பார்த்துகோங்களேன்..! இந்த நேரலைச் செய்தி சொல்லிக்கொண்டிருந்த இரண்டு மணி நேரம் முன்னாடி, நடுவண் அரசுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும் நடந்த பேச்சு வார்த்தை தோல்வியில முடிஞ்சு வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான முன்னெடுப்புகளுக்கு ஆயத்தப்பட்டுகொண்டிருக்கிற சூழ்நிலையில் தான், சரி காங்கிரஸ்காரன் டிவில எப்படி சொல்றானுங்கனு பார்த்தா.. ங்கொய்யால.. வாயே தொரக்கமாட்டேன்றானுங்க..!!
கலைஞர் டிவி செய்தில கூட கனிமொழி கைத பத்தி ரெண்டு மூணு நாள் வாயே தொறக்கல அவனுங்க..

நாம பாக்குறதெல்லாம் ஏதோ ஒரு கட்சி சார்பா இயங்கிட்டு இருக்க டிவி தான் இல்லைங்கள.. படிக்கறதெல்லாம் ஒருமை சார்ந்த-தின்னிக்கப்பட்ட செய்திகள் தான்.. All are biased news.. ஒத்துக்குறேன்! அதுக்காக இப்படியா ??

இவுங்க டிவில சொல்லாட்டி காட்டாட்டி இருக்க மக்களுக்கெல்லாம் தெரியாம போயிரும்னு நினச்சானுன்களோ என்னவோ..

இந்த தற்குறிங்கலாம் நாட்ட ஆண்டு நாசமா போயி...
இவனுங்கள பார்த்தா தீக்கோழி நினைப்பு தான் வருது...!! ஹிஹிஹிஹி..
......
........
அண்ணனே(நான்தான்!) எல்லா department மேலயும் டெங்சனா இருக்கேன்...!!
ஸ்ட்ராங்கா ஒரு டீ போடுங்க மாஸ்டர்..!!

Thursday, June 16, 2011

Channel 4 வெளியிட்ட இலங்கை போர் குற்ற வீடியோ ஆதாரம்..

.....
என்னத்த சொல்ல..! நீங்களே பாருங்க.. என்னால பாக்க முடியல.. !!
ஆஸ்பத்திரில கூட குண்டு மழை பொழிஞ்சதும்.. மருந்து மாத்திரை கூட இல்லாம மருத்துவ குழு வெளியேறுகிற அவலம் எங்கயும் நடக்கல... பெண்களின் வெற்று உடம்பை அள்ளி அள்ளி ட்ரக்டர்ல போடுராணுக! கடைசியா குத்துயிரும் கொலையுயிருமா முனகற பெண்ணை அப்படி எட்டி உதைக்குறான்.. ஐயோ நெஞ்சே வெடிச்சிருச்சு. .
ஒரு பெரிய இனஅழிப்புக்கு துணைபோய், போர் குற்றம் நடக்கலன்னு சாட்சியம் சொல்ல போற இந்தியா... அட போங்க... என்னால அழுகைய அடக்க முடியல..!! :(

http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170

சிவசங்கர் மேனனுக்கும், சோனியா காந்திக்கும், மன்மோகன் சிங்குக்கும், புடுங்கி கருணாநிதிக்கும் கடுகளவு மனுசத்தன்மை கூட இல்லாம போச்சே.. :(

அட போங்கடா !!
"வாழ்க பாரத மாதா"னு என்ன மயிருக்கு சொல்லணும்.. !

Tuesday, June 7, 2011

வளரும்... ஆனா வளராது.. !

நல்லா இருக்கீங்களா ? என்னடா தலைப்பு மொட்டையா இருக்கேனு பார்த்தீங்களா?? நானும் இந்த பதிவுக்கு என்னனமோ தலைப்பு யோசிச்சு பார்த்தேன்.. எதுமே செட் ஆகல. சரி முதல்ல எதாவது தலைப்பு போட்டு எழுத ஆரம்பிப்போம்.. பொறவு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன்.. "இந்தியா" - இந்த வார்த்தைய, பதிவோட தலைப்புக்கு முன்னாடி போட்டுகோங்க.. இதுல என்னப்பா உனக்கு டவுட்டுனு நீங்க கேட்கலாம்.. சத்தியமா எனக்கு இதுல தான் டவுட்டே! நான் சின்னபுள்ளயா இருக்கும் போது (ஹ்ம்ம்..6 வருசம் ஆச்சு!) "இந்தியா வளரும் நாடு"ன்னு சொன்னங்க! இப்பவும் அதே சொல்லிட்டு இருக்காங்க! செல் போன் வந்திருச்சு.. 2G ஊழல் நடந்து 3G தொடங்கிருச்சு.. ரெண்டு மூணு ராக்கெட் வேற விட்டோம், நாலு ஏவுகணை சோதனை, அப்புறம் Common Wealth Game (இதுலயும் ஊழல் நடந்துச்சாமே.. சின்ன பையன் இத பத்தி பேச கூடாதுனு எங்க அண்ணன் சொல்லிருக்காரு! நான் மாட்டேன்ப்பா! ), Cricket World Cup, IPL Session 4 ...

சரி.. வளர்ந்த நாடுன்னு சொல்லுவதற்கு எது அளவீடுனு வழக்கம் போலவே இணையத்துல தேடினேன்(ஓம் Googleலே சரணம் !). எதிர்பார்த்தது போலவே, ஒரு நாடு வளர்ந்த நாடு/ வளரும் நாடு-ன்னு மிகத்துள்ளியமான வரையறை கிடையாது! (தெரியும் மாப்ள,பண்ணவும் மாட்டானுக - உபயம் வளர்த்த நாடுகள்). இருந்த போதிலும், ஓரளவுக்கு குத்துமதிப்பா ஒரு நாடோட வளர்ச்சி - மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP Growth) , அல்லது தொழில்மயமாக்கம்(Industrialization), அல்லது மனித வளர்ச்சி சுட்டெண்(Human Development Index-கல்வி மற்றும் ஆயுள்காலமும் உட்பட) இவைகளால் அளவிடப்படுகின்றன.. இதெயெல்லாம் மீறி, வளர்ந்த நாட்டுக்கு நீங்கள் சலாம் போட தெரிஞ்சிருக்கணும்... (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!)
அது என்ன கருமமாவே இருக்கட்டும்.. கொஞ்சம் இதை ஆழமாக ஊடுருவிப் பார்ப்பதற்கு 3 நிகழ்வுகளை உங்க முன்னாடி வைக்கிறேன்!

1. கடந்த வாரத்தில் Praba Kola என்கிற நச்சுக்கழிவுகளைத் தாங்கிய கப்பல், 'கப்பல் உடைக்கும் பணி' என்பதான போர்வையில் மிகக்கள்ளத்தனமாக குஜராத் துறைமுகத்திற்கு இந்திய அதிகாரிகளால் உள்ளே அனுமதிக்கப்பட்டது. இந்தக் கப்பல் தான் 2006ல், Ivory Coast என்கிற இடத்தில் நச்சுக்கழிவுகளைக் கொட்டி 16 பேர் மர்மமான முறையில் இறக்கக் காரணமாய் இருந்தது. இது தொடர்பான வழக்கு இன்றும் முடிக்கப்படவே இல்லை! (இது போன்ற கப்பல்கள் பெரும்பாலும் ஐரோப்பிய கம்பெனிகளுக்குச் சொந்தமானவை. பனாமா நாடுகளுக்கு விற்கப்பட்டு, பெயர் மட்டும் மாற்றம் செய்து, பின் கழிவுகளை எதாவது ஒரு வளரும் நாடுகளில் கொட்ட ஆயத்தப்படுத்தப்படுகின்றன.) சமூக ஆர்வலர்களின் கவனதிற்குவந்து, பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2. Endosulfan என்கிற பூச்சிக்கொல்லி மருந்து- மிக உயரிய அளவில் நச்சுத்தன்மை கொண்டதாலும், உயிரியல் அமைப்புக்கே அழிவை ஏற்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்ததாலும் வளர்ந்த உலக நாடுகள் இதை முற்றிலுமாக தடை செய்துவிட்டன.! கிட்டத்தட்ட 80 நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படவில்லை ! இதுபற்றி பத்திரிக்கைகளில் மூன்று நாட்களுக்கு வந்த செய்திகள், பிறகு என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல சமயங்களில் அரசின் வாய்ப்பூட்டை திறக்கின்ற சாவிகள் கூட மௌனித்துப்போகின்றன!

3. கொஞ்ச வருடங்களுக்கு முன்பு Pepsi, Coca Cola குளிர்பானங்களில் கலந்திருந்த நச்சுத்தன்மையின் அளவு குறித்து பெரிய அளவில் பேசப்பட்டதும், போராட்டங்கள் நடத்தப்பட்டதும், பின்பு அனைத்தும் நீர்த்துப்போய் இந்திரா நூரி Pepsi -ன் தலைவராக ஆனா பிறகு, பத்திரிக்கைகள் கொண்டாடிய விதம் வருத்ததிற்குரியதே!

இது எல்லாமே வளரும் நாடுகளில் வரிசையில் முன்னணியில் இருக்கின்ற இந்தியாவில் தான் நடக்கிறன.! என்னைப் பொறுத்தவரையில் இந்தியா வளர்த்த நாடக ஆவது வெறும் பகற்கனவே! ஊழலை ஒழிச்சா நாடு வளந்திரும்! அரசியல்வாதி ஒழுங்கா இருந்தா நாடு வளந்திரும்! லஞ்சம் இல்லேன்னா நாடு வளந்திரும்! அதிகாரிகள் சரியா வேலை செஞ்சா நாடு வளந்திரும்! என்னங்கடா கலர் கலரா ரீல் விடுறீங்க? சரி, எல்லாம் சொல்ற ரைட்டு! அப்போ நாட்டோட பிரஜையா இருக்க நாம சரியாய் இருக்கமா என்ன??!!

எங்கிருந்து வந்தார்கள் எல்லோரும்? டிக்கெட் waiting list ல இருந்தாலும் TTRர அட்ஜஸ்ட் பண்ணி உட்கார இடம் வாங்கிக்கலாம்னு போற ஆளு தானே நாம! வேலை சீக்கிரமா நடக்க 'பார்த்து பண்ணிக்கலாம் சார்'னு சொல்ற ஆட்கள் தானே நாம..! "இதுகொஞ்சம் சிக்கலான மேட்டர், கொஞ்சம் செலவு புடிக்கும்ங்களே!"னு பிட்ட போடுற ஆட்கள் நம்ம கிட்ட இல்லையா?? தப்புன்னு தெரிஞ்சாலும், அடிப்படை விலைவாசி ஏறிப்போனாலும், ஏதோ அவங்கள மட்டும் பாதிக்காத மாதிரி கரை வெட்டி கட்டிக்கிட்டு கட்சிக்காக அலையுற லோக்கல் கவுன்சிலர் நம்ம கூட புழங்குற ஆள் இல்லையா?? நம்ம சுத்தி இருக்க உறவு முறைகளில் யாராவது ஒருவர் கூட இந்த முகமாக பார்க்க முடியலன்னு சொல்லுங்க பார்ப்போம்? அம்மா டீச்சரா இருக்கலாம், அப்பா ஒரு அரசு அதிகாரியா இருக்கலாம், சித்தப்பா, மாமன், மச்சான், பங்காளினு ஏதாவது ஒரு வகையில் நாட்டோட தினச் சக்கரங்களை நகர்த்துகிற கடைக்கோடி அச்சாணியா இருக்குற நாம ஒழுங்கா நம்ம கடமைய செஞ்சா, இப்போ குறைசொல்லுற அத்தனை பிரச்சனைகளையும் ஊதித் தள்ளிரலாமே! அழுகிய குட்டையா இருக்க கூட்டத்துக்குள்ள இருந்து நல்ல தலைவனா வர போறாரு? கள்ளப்பயளுங்க தான் வருவாங்க!

நாடு சுதந்திரம் அடைஞ்சு 60 வருசத்திற்கு மேல ஆகுது.! இதுநாள் வரைக்கும் 'முறைப்படுத்தப்பட்ட ரேஷன் விநியோகம்' நம்மாள கொண்டு வர முடிஞ்சுதா? உங்களுக்குத் தெரிய கடைக்கோடி கிராமங்களுக்கு மருத்துவ வசதியும், கல்வி வசதியும், பாதுக்காப்பான குடிநீர், கழிப்பிட வசதி கிடையாது! (லாஸ்டா சொன்ன ரெண்டும் டவுன்ல கூடத்தான் இல்ல!) அட இவ்வளவு ஏன், சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நம்மாள் இன்னும் பென்சன ஒழுங்கா குடுக்க முடியல! இந்தியா வளர்கிறது இந்தியா வளர்கிறதுனு யாருக்கு கூப்பாடு போடுறாங்கனு தெரியல! சமீபத்தில் உச்சநீதி மன்றமே "இரு வேறு இந்தியா இருப்பதை அனுமதிக்க முடியாது!" என்று சொல்லி இருக்கிறது! (ஒரு பக்கம் அசாத்திய வளர்ச்சி, மறுபக்கம் வறுமை!)

"வளரும் நாடுன்னாவே ரொம்ப கீழ் தனமா இருக்கும். மாடா இருந்தாலும் சரி, மனுசனா இருந்தாலும் சரி, உயிர்களுக்கு மதிப்பில்லை! லஞ்சமும் ஊழலும் மலிஞ்சு கெடக்கும். தொறந்த வீட்டுக்குள்ள யாரு வேணும்னாலும் உள்ள வரலாம், எதுவேணும்னாலும் விக்கலாம், எது வேணும்னாலும் செய்யலாம்! நீ ஏதும் கேட்கக்கூடாது ! ஏன்னா நான் வளர்ந்த நாடு!" என்கின்ற மனோபாவத்தில் கீழ் நோக்கி ஒரு ஆய்வுக்கூடமாக அல்லவா பார்க்கின்றன வளர்ந்த நாடுகள்!

தற்போது உலகில் வேறு எந்த நாட்டின் அளவிற்கும் இல்லாத 50% இளைஞர்களை மட்டுமே கொண்ட நாடு இந்தியா! வளர்ந்த நாடாய் ஆவதற்கும், வல்லரசாய் ஆவதற்கும் மிகத்தகுதியானது! ஆனா, வெள்ளைக்காரனுக்கு ஆமாஞ்சாமி போட்ட நம்மாள, திமிரோட எழுந்து நிக்குற வலிமையை நம்மை சுத்தி இருக்க சமுதாயதிற்கு - நாம குடுக்கவும் மறந்துட்டோம், எடுத்துக்கவும் மறந்துட்டோம்!

"We have been always noticed as Under Developing Country, because We are not behaving as Developed Country!"

ஒரு நல்ல குடிமகன் வளர்வதற்கு குடும்பமும் கல்விக்கூடங்களும் தான் மிக முக்கிய காரணிகள்! "நீ நல்லா படிச்சு, கைநிறையா சம்பாதிச்சு பெரிய ஆளா வரணும்டா"னு குடும்பத்திலயும், "இந்த Course படி, US செட்டில் ஆயிரலாம்!"னு காலேஜ்ல சொல்லி தாராங்க! "உனக்கெதுக்குடா இந்த வேல.. போய் பொழப்ப பாக்குறத விட்டுட்டு.."னு சொல்லி சொல்லியே எதிர்கால ஆலமரங்களை போன்சாய் மரங்களாக நம்ம வீட்டு அலங்கார அடுக்குகளில் வளர்க்கிறோம்! அப்போ நாடு ?? இன்னும் வளரும் நாடவே இருக்க வேண்டியது தான் ! உன்னோட கடமையா ஒழுங்கா செஞ்சவே நாடும், நம்ம சுத்தி இருக்க சமுதாயமும் நல்லா இருக்கும்னு சொல்லித்தர தயங்குகிறோம்! வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு நம்மக்கான கடமையின் விதையை மனசுல விதைக்க மறந்து (மறுத்து) போகிறோம்.!

"இது என் மக்களுக்கு எதிரானது, பாதுகாப்பற்றது! உன் பொருளை தூக்கிட்டு ஓடிரு!"னு என்றைக்கு ஒருமித்த குரல் தவறானவர்களுக்கு எதிராகக் கேட்கிறதோ அன்றைய தினத்தில் இருந்து இந்தியா உண்மையிலேயே கட்டமைக்கப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளலாம்! தேவை நம் எண்ணத்திலும் செயலிலும் மாற்றம்! We must start behave as developed nation !!

“தட்டிக்கொடுக்கவும், தட்டிக்கேட்கவும் வார்த்தைகள் என்னவோ தயாராகத்தானிருக்கின்றன!
பாவம் நீங்கள் தான் பேசத் தயாரில்லை!!